வழிபாடு

அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

தண்டுமாரியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2023-04-21 09:00 IST   |   Update On 2023-04-21 09:00:00 IST
  • 25-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
  • 30-ந்தேதி வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று 6.30 மணியளவில் அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பூக்கம்பம் கொண்டு வந்து அதில் அக்னி சட்டி வைக்கப்பட்டது. இதில் தண்டுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 23-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 24-ந் தேதி அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருகிறார்.

25-ந் தேதி மாலை 6.30 மணியளவில் திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு மலர் பல்லாக்கில் அம்மன் திருவீதி உலா, 26-ந் தேதி காலை 7 மணியளவில் சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி, 27-ந் தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், காலை 11 மணிக்கு மஞ்சள் நீர், இரவு 7 மணிக்கு கொடி இறக்குதல், இரவு 8 மணிக்கு கம்பம் கலைத்தல், 28-ந் தேதி காலை 6 மணிக்கு தமிழ் முறை லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெறும். 30-ந் தேதி காலை 7 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News