வழிபாடு

விடுமுறை நாளான இன்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Published On 2024-11-24 06:51 GMT   |   Update On 2024-11-24 06:51 GMT
  • மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
  • நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர்.

திருவனந்தபுரம்:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இதனை அதிகரிக்க முடிவு செய்த போது, பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வந்தனர். இன்று காலை 7 மணிக்குள் 18 ஆயிரத்து 648 பக்தர்கள் புனித படிகளில் ஏறியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர். விடுமுறை தினமான இன்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தவுடன் உடனடியாக திரும்பிச் செல்ல தொடங்குவதாகவும், சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News