வழிபாடு
null

புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியும்... வழிபடும் முறையும்...

Published On 2024-09-25 12:26 GMT   |   Update On 2024-09-26 05:58 GMT
  • பைரவருக்கு விரதமிருந்து விளக்கேற்றி வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கும்.
  • ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு...

அதுவும் பித்ருகளுக்கு உகந்த புரட்டாசி மாதம் தேய்பிறையில் வருகிற அஷ்டமியை சம்புகாஷ்டமி என்று கூறுவதுண்டு. இந்நாளில் பைரவருக்கு விரதமிருந்து விளக்கேற்றி வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கும். இந்நாளில் பைரவரை வழிபடும் முறை குறித்து தெரிந்துகொள்வோம்...

* பைரவருக்கு செவ்வரளி மலர் சூட்டி நான்கு புறமும் தீபம் கொண்ட விளக்கேற்றி வழிபடலாம்.

* மிளகு சேர்த்த உளுந்தவடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

* முடிந்தால், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள்.

* கடன் தொல்லை, தொழில் நஷ்டம் போன்றவைகளால் பாதிப்படைந்தவர்கள் பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபடமிட வேண்டும்.

* ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.

Similar News