வழிபாடு

இன்று திவ்ய பிரதோஷம்: முன் ஜென்ம பாவம் நீங்கும்

Published On 2024-06-19 04:41 GMT   |   Update On 2024-06-19 04:41 GMT
  • சிவபெருமானை வழிபட்டால் தோஷங்கள் விலகி துன்பங்கள் நீங்கி நல்லது நடக்கும்.
  • துவாதசியும் திரயோதசியும் சேர்ந்து வரும் பிரஷத்தையே திவ்ய பிரதோஷம் என்பார்கள்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறையில் திரயோதசி தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் தோஷங்கள் விலகி துன்பங்கள் நீங்கி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ கால நேரத்தில் நந்திக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்துவார்கள்.

அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால் அபரிமிதமான பலனைப்பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதிலும் ஒவ்வொரு மாதமும் எந்த கிழமைகளில், எந்த திதி சேர்க்கையுடன் பிரதோஷம் வருகிறது என்பதை பொருத்து பலன்கள் அமையும்.

அந்த வகையில் இன்றைய பிரதோஷம் திவ்ய பிரதோஷம் ஆகும். துவாதசியும் திரயோதசியும் சேர்ந்து வரும் பிரஷத்தையே திவ்ய பிரதோஷம் என்பார்கள்.

இந்த பிரதோஷத்தில் வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இன்று மாலை சிவாலயங்களுக்கு சென்று திருவாசகம் பாடி, வில்வ இலை சாத்தி, 16 தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த பலனை பெற முடியும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News