search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 46 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
    • தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 46 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷை மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஸ்ரீகாந்த் ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும்போது அனுமதி இல்லை என வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
    • பிரசாரம் செய்ய 3-ந் தேதி மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    ஏற்கனவே தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் ஓட்டுவேட்டையாடி வருகிறார்.

    ஆனால் சில பகுதிகளில் வேட்பாளர்கள் அல்லது அவரை சார்ந்த ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும்போது அனுமதி இல்லை என வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சியினர் மீதும், வேட்பாளர் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. நேற்று தி.மு.க. வேட்பாளருக்கும் அனுமதி கிடைக்காததால் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டது.

    தேர்தல் 5-ந்தேதி என்றாலும் பிரசாரம் செய்ய 3-ந் தேதி மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி உள்ளது. அதன்படி இன்னும் 14 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பிரசாரம் செய்ய 48 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெற வேண்டும். வேட்பாளர் பிரசாரம் செய்யும் பகுதியை முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும். இங்கு 48 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். எனவே அனைவரும் பிரசாரம் செய்வார்கள். அதை கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் தங்கள் அனுமதி கடிதத்தை வழங்க வேண்டும்.

    தற்போது ஒரு கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் ஒரு மனுவில் கூட குறிப்பிட்ட இடம், நேரம் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளை பொதுவாக குறிப்பிட்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை காலை முதல் இரவு வரை என குறிப்பிட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் 3-ந் தேதி வரை தொகுதி முழுவதும் அந்த ஒரே கட்சியினர்தான் பிரசாரம் செய்ய முடியும். இதற்கு எப்படி அனுமதி அளிக்க முடியாது.

    வேட்பாளர்கள் முறையாக பிரசாரம் செய்யும் இடத்தையும், தேதி மற்றும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். இதுபோல் 48 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறும் வகையில் வேட்பாளர்கள் முறையாக விண்ணப்பித்தால் அனுமதி பெறுவதில் சிக்கல் இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
    • வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்து மனு மீதான பரிசீலனையும் முடிந்துள்ளது. இடைத்தேர்தல் மொத்தம் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலில் முழு அளவிலான வாக்கு சதவீதத்தை எதிர்நோக்கி அரசு விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 8 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர்.
    • நள்ளிரவு 1.30 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என்று கடந்த 7-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 17-ந் தேதி வரை நடந்தது.

    பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்தன. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சுயேட்சைகள் என 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இதில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனுக்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காத 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

    நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 8 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர்.

    எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உடன் 47 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. அப்போது தி.மு.க வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சினமும் ஒதுக்கப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்களிடம் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்பவருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் பத்மாவதி கர்நாடகா மாநிலம் பெங்களூரு, உதயா நகர், மஞ்சு நாத்சுவாமி நிலையம் பகுதியை சேர்ந்தவர்.

    இவரது ஓட்டு கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடலாம் என்று வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பத்மாவதிக்கு மட்டும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    வேட்பாளர் பத்மாவதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தகுதியானவரா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் முழுவதுமாக வெளியிடுவது நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் அறையில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    இந்த குழப்பம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நள்ளிரவு வரை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக ஈரோடு தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் கூறும்போது,

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி லோக்சபா, ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் எந்த மாநிலத்துக்கும் வேட்பா ளராக போட்டியிடலாம்.

    ஆனால் சட்டசபை தொகுதிக்கு அம்மாநிலத்தில் வாக்காளராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடகா மாநில பெண் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதனையடுத்து நீண்ட இழுப்பறிக்க பிறகு நள்ளிரவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 பேர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் 46 பேரின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளது.

    • நேற்று தனது வேட்புமனுவை செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.
    • வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    ஈரோடு அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

    அடுத்து சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவில் இருந்த செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று தனது வேட்புமனுவை செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.

    இந்த நிலையில், செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

    அமைச்சர் முத்துசாமி தலைமையிலான தி.மு.க.வினர் வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

    • வேட்பு மனுக்கள் வாபஸ் பெற நேற்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
    • வெளிமாநில வேட்பாளரின் பெயரை நீக்கி இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க நேரடியாக களம் இறங்கி வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற நேற்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

    அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிந்தவுடன் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தமாக 46 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    வேட்பாளர் பட்டியலில் இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்ற வேட்பாளரின் பெயரை நீக்கி இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47-ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளது. 

    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதிப் பட்டியல் வெளியீடு.
    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த இடை த்தேர்தலில் தி.மு.க நேரடியாக களம் இறங்கி வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடை த்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ப்பட்டன. 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.

    மதியம் 3 மணியுடன் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதன்மூலம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க. நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிட இருந்தார்.
    • செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க. நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிட இருந்தார்.

    இதைத்தொடர்ந்து செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால் கட்சியில் இருந்து செந்தில் முருகன் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்ற நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி செந்தில் முருகன் விலகி உள்ளார்.

    • தி.மு.க.வினர் விர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் களம் களைகட்டி, திருவிழா போல் காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த இடை த்தேர்தலில் தி.மு.க நேரடியாக களம் இறங்கி வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடை த்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ப்பட்டன. 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படுகிறது.

    ஏற்கனவே தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி வரியாக பிரித்து வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தி.மு.க அரசின் சாதனை திட்ட ங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுடன் உள்ளூர் தி.மு.க பிரமுகர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டிடும் சீதாலட்சுமி இன்னமும் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் கடந்த 2 நாட்க ளாக தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆனாலும் அனுமதி இன்றி பிரசாரம் செய்ததாக அவர் மீது ஈரோடு டவுன் போலீ சார் மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் சீதாலட்சுமி தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த முறை முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் எந்த ஒரு பரபரப்புமின்றி, ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக உள்ளது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இது மட்டுமின்றி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமட்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது. தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். இதனால் தேர்தல் களம் களைகட்டி, திருவிழா போல் காணப்பட்டது. வாக்காளர்களும் பணம், பரிசு மலையில் நனைந்தனர்.

    இந்த முறை தேர்தல் களம் மாறி உள்ளது. தி.மு.க.வினர் மற்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியாகிறது.

    இதைத்தொடர்ந்து நாளை முதல் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிர மடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொட ர்ந்து வரும் 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
    • இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 56 லட்சம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

    தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.

    • சந்தோஷ் குமார் (20) சேண்டி வியூஸ் என்ற பெயரில் யூட்டூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
    • அதில், தனது கேடிஎம் டியூக் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். 20 வயதான இவர் சேண்டி வியூஸ் என்ற பெயரில் யூட்டூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது கேடிஎம் டியூக் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்களை கொண்டுள்ளார்.

    இந்நிலையில், சந்தோஷ் தனது நண்பரான கவின் (19) உடன் சேர்ந்து கேடிஎம் டியூக் பைக்கில் கோவாவிற்கு பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களை தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வந்தார்.

    கோவை பயணத்தை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே யூடியூபர் சந்தோஷ் அதிவேகமாக வந்தபோது, எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் எதிரே பைக் ஓட்டி வந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் யூடியூபர் சந்தோஷ் அவரது நண்பர் கவின் மற்றும் சதீஷ்குமாருடன் வந்த சந்தோஷ் (36) ஆகியோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து மூவரும் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    உயிரிழந்த சதீஷ்குமாரின் உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    அண்மை காலங்களில் யூடியூப் , இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இளைஞர்கள் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சாலை விபத்தில் யூடியூபர் ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ராகுல் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் எனக்கு பின்னர் தான் தெரிந்தது என்று மனைவி தகவல்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் - சாகிதா தம்பதிகளின் ஒரே மகன் ராகுல் (27).

    என்ஜினீயரிங் பயின்ற ராகுல் டிக் டாக் மூலம் பிரபலமானவர். கடந்த சில வருடங்களாக இன்ஸ்டா கிராமில் பல்வேறு வாழ்க்கை சம்பவங்களையும், சினிமா பாடல்கள், வசனங்களை நகைச்சுவை உணர்வு களோடு பதிவு செய்து ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்று இருந்தார்.

    இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, நேரு நகரைச் சேர்ந்த தேவிகா ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று இருந்த தன் மனைவியை பார்க்க கவுந்தப்பாடிக்கு கடந்த 16-ந் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் ராகுல் சென்றார்.

    அப்போது சாலையின் வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது.

    இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகுல் மரணம் அவரை பின் தொடர்ந்த ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இதற்கிடையே ராகுலின் மனைவி தேவிகாஸ்ரீ தனது மாமியார் குடும்பத்தினர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய தேவிகாஸ்ரீ, "ராகுல் இன்ஸ்டாகிராம் மூலமாக தான் எனக்கு பழக்கமானார். எங்களுக்கு கவுந்தப்பாடி புது மாரியம்மன் கோவில் திருமணம் நடந்தது.

    அதற்கு பின்னர் தான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் எனக்கு தெரிந்தது. கோவை சேர்ந்த பெண்ணுடன் பெண்ணுடன் ராகுல் 6 மாதம் வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் எனது மாமியாரின் தொந்தரவால் அந்த பெண் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கும் என் கணவருக்கும் விவாகரத்து ஆனது.

    இருந்தாலும் இதனை நான் ஏற்றுக்கொண்டு அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். நாங்கள் ஓர் ஆண்டாக மாமியார் வீட்டில் தான் வசித்து வந்தோம். அதன் பின்னர் தான் ஈரோடு வளையகார வீதியில் தனிக்குடித்தனம் வந்தோம். இந்நிலையில்தான் ராகுலுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    எனது மாமியார் ராகுல் மது குடிப்பதை ஊக்குவித்தார். இது தொடர்பாக என் மாமியாரிடம் நான் கேட்டபோது எனக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ராகுலும் என்னை அடித்து துன்புறுத்தினார். ஆனால் இதையும் தாண்டி அவருடன் நான் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.

    ராகுலுக்கு சினிமா மற்றும் பைக் மீது அதிக இஷ்டம். அவரிடம் அதிகமாக குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வந்தேன். ஆனால் அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு என்னை பார்ப்பதற்காக ராகுல் தனது மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடி நோக்கி வந்த போது தான் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அதன்பின் எனது மாமியார் வீட்டினர் என்னை முழுவதுமாக ஒதுக்கி வைத்தனர். ராகுலின் இறுதி காரியத்துக்கு கூட என்னை அனுமதிக்கவில்லை. கணவரை இழந்த வேதனையில் உள்ளேன்.

    என் மாமியார் வீட்டினர் ராகுலின் ஆதார் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை கேட்டு எனக்கு போன் செய்தனர். ராகுலுடன் நான் வாழ்ந்ததை மறைக்க நினைக்கின்றனர். ஆனால் அந்த பொருட்களை அவர்களுக்கு தரமாட்டேன். அவருடன் நான் வாழ்ந்ததற்கு அது தான் ஆதாரம்" என்று தெரிவித்தார்.

    மருமகள் குற்றச்சாட்டை தொடர்ந்து ஈரோட்டில் வசிக்கும் ராகுலின் தாய் சாகிதா கூறியதாவது:-

    நேரம் சரியில்லை என்று கூறி எனது மகனும், மருமகளும் தனி குடித்தனம் சென்றனர். என் மகளைப் போலத்தான் எனது மருமகளை நாங்கள் பார்த்துக்கொண்டோம். எனது மகன் ராகுலுக்கு மது குடிக்கும் பழக்கம் கிடை யாது. என் மகன் நினைவாக உள்ள பொருட்களை கேட்டோம்.

    மருமகளை அழைத்து வர சென்ற போதுதான் விபத்தில் ராகுல் சிக்கி உயிரிழந்தார். நான் ராகுலுக்கு மது வாங்கி கொடுக்கவில்லை. என் மகன் நல்லவன். என் மருமகளை நான் எந்த ஒரு தொந்தரவும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

    ×