அழகுக் குறிப்புகள்
null

கோடை கால சரும நோயை தவிர்ப்பது எப்படி?

Published On 2023-04-07 07:44 GMT   |   Update On 2023-04-07 07:44 GMT
  • தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
  • கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் வெயிலின் நேரடித்தாக்கம் அதிகமாக இருப்பதால், முதலில் மனிதர்களுக்கு சருமத்தை அதாவது தோல்களை தான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தோல்களை முதலில் பராமரிப்பது அவசியம்.

தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அடிக்கடி சுத்தமான நீரினால் முகத்தை கழுவ வேண்டும். பருத்தி ஆடைகள் உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் வகையில் உடுத்திக்கொள்ள வேண்டும். அதிக வாசனை உள்ள சோப், திரவியங்கள், பவுடர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் வெளியே வெயிலில் செல்ல நேரிட்டால் தொப்பி, குடை போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். கோடை வெயில் சிறுவர், சிறுமிகளை அதிகமாக பாதிக்கக்கூடும், எனவே அவர்களை பாதுகாக்க வேண்டும். கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

அதாவது கீரை, இளநீர், நுங்கு, மோர் மற்றும் இதர பழச்சாறுகள், நீர் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கார உணவு வகைகள் மற்றும் மதுபானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்களை தவிர்க்கலாம்.

மேற்கண்ட தகவலை தோல் சிகிச்சை சிறப்பு நிபுணர் தேவ்ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News