அழகுக் குறிப்புகள்

ஆரஞ்சுதோலை சரும அழகிற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்...

Published On 2023-04-03 03:52 GMT   |   Update On 2023-04-03 03:52 GMT
  • ஆரஞ்சுதோலில் சருமத்தை பாதுகாக்கும் பல்வேறு சத்துக்கள் உள்ளது.
  • இன்று ஆரஞ்சுதோலை சருமத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தோலை கழுவி சுத்தமாக காய வைத்து, அதனை பவுடராக அரைத்துக் கொள்ளவும்.இதனை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.இதனை பயன்படுத்தி பல முறைகளில் முகத்திற்கு பயன்படுத்தி முகத்தை அழகாக்கலாம்.

ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 2 மே.கரண்டி , 1 மே.கரண்டி தேன் ,1 மே.கரண்டி தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்னர் முகத்தை இளஞ்சூடான நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர ,பொலிவான முக அழகு கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 1 மே.கரண்டி , தயிர் 2 மே.கரண்டி இரண்டையும் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் அப்படியே இருந்து விட்டு , முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி , அழகான தெளிவான முக அழகு கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 2 மே.கரண்டி, பால் 1 மே.கரண்டி , 1 மே.கரண்டி தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர முகத்திற்கு அழகான நிறம் கிடைப்பதோடு சருமத்தில் உள்ள மருக்கள்,கரும்புள்ளிகள், நீங்கி விடும்.

2 மே.கரண்டி பாலில் 5 பாதாம் பருப்புகளை சேர்த்து அரைத்து அதனுடன் 1 மே.கரண்டி அளவு ஆரஞ்சு பழத்தோல் பவுடரையும் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15 -20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். சருமத்துக்கு ஆரோக்கியம் கொடுப்பதோடு , இது முகத்தை பளிச்சிட வைக்கும்.

Tags:    

Similar News