செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Published On 2016-06-15 13:13 GMT   |   Update On 2016-06-15 13:13 GMT
உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 3 வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கு, 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கு மனுவில், மக்கள் தொகை அடிப்படையில உள்ளாட்சி பதவிகளை தலித்துகளுக்கு ஒதுக்க வேண்டும், சென்னை மேயர் பதவியை தலித்துக்கு ஒதுக்க வேண்டும், தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட சேலம் மேயர் பதவியை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மூன்று வாரத்தில் பதில் தரவேண்டும் என்றும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 19 சதவிகிதமாக அதிகரிக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடமாட்டோம் திருமாவளவன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News