செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கையை கலைஞர் கருணாநிதி வெளியிட்டார்

Published On 2016-04-10 13:16 GMT   |   Update On 2016-04-10 13:15 GMT
தி.மு.க. தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 16-ந்தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவரமாக ஈடுபட்டு வருகின்றன.

தங்களது தலைமையிலான கூட்டணியை உருவாக்கி, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டையும். தி.மு.க. முடித்துவிட்டது. வருகிற 13-ந்தேதி தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை துரிதப்படுத்தும் வகையில் இன்று தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

சென்னை அண்ணா அறிவாயலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிட  பேராசிரியர் அன்பழகன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை டி.ஆர். பாலு தலைமையில் தயாரிக்கப்பட்டது. இந்த குழுவில் கனிமொழி, துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.கே.எஸ். இளங்கோவன், ராமசாமி, வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், என்.ஆர். இளங்கோவன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இடம் பெற்றிருந்தனர்.

Similar News