உள்ளூர் செய்திகள்
விளக்கு பூஜை நடந்தது.
கூரத்தாங்குடி கோவிலில் 108 விளக்கு பூஜை
- பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகபட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூரத்தாங்குடி கிராமத்தில் சிவா விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. திருக்கடையூரில் எமனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க எமன் லிங்கம் பிடித்து வழிபட்ட ஸ்தலம் என்பது இதன் சிறப்பு.
இக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தாயார் ஸ்ரீ குங்குமவள்ளி அம்மனுக்கு 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் ,சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுமங்கலிகள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.