செய்திகள்
பெரம்பூரில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
பெரம்பூரில் உள்ள சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பூர்:
சென்னை பெரம்பூர் வெங்கட்ராமன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரேசன்(வயது 40). இவருடைய மனைவி பார்கவி. கணவன்-மனைவி இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 19-ந் தேதி கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு தங்களது சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டனர்.
நேற்று மதியம் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள், பொருட்கள் அனைத்தும் தரையில் சிதறிக் கிடந்தன. பீரோவை சோதனை செய்த போது அதில் இருந்த 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் சென்ற போலீசார், கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மேலும் இதுபற்றி பெரம்பூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.