செய்திகள்

திருச்சியில் வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த போலி ஆர்.டி.ஓ. கைது

Published On 2016-06-06 19:58 IST   |   Update On 2016-06-06 19:58:00 IST
திருச்சியில் மீன் வண்டியில் இருந்து சாலையில் கழிவுநீர் ஊற்றியப்படி செல்கிறது என்று வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த போலி ஆர்.டி.ஓ. கைது செய்யப்பட்டார்.

திருச்சி:

திருச்சி கீழ பஞ்சப்பூரை சேர்ந்தவர் ராமையா (வயது 53). சம்பவத்தன்று இவர் வேனில் மீன் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு சென்றார். திருச்சி செட்டியப்பட்டி ரெயில்வே பாலம் அருகே செல்லும் போது, அங்கு நின்ற ஒருவர் திடீரென வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் என்று கூறிய அவர், மீன் வண்டியில் இருந்து சாலையில் கழிவுநீர் ஊற்றியப்படி செல்கிறது. எனவேரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும் எனக்கூறி ஆவணங்கள் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ராமையா எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று ஆர்.டி.ஓ. என்று கூறிய நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தேனி மாவட்டம் அஞ்சனாம்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் (40) என்பதும் போலி ஆர்.டி.ஓ.வாக நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News