ஹெல்மெட் அணியாத 700 பேர் மீது வழக்கு
சேலம்:
சேலம் மாநகரத்தில் சாலை விபத்தை முற்றிலும் இல்லாமல் செய்ய, சேலம் போலீஸ் கமிஷனர் சுமித்சரண் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முதல் சேலத்தில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பிரிவு போலீசாரும், அந்தந்த பகுதி போலீசாரும் நின்று கண்காணித்து ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். பின்னர் வாகன ஓட்டிகள் மொபைல் கோர்ட்டுக்கு அழைத்து சென்று அபராதம் கட்ட வைக்கப்பட்டனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மூலம் ஒரே நாளில் ரூ.70ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இன்று 2–வது நாளாக போக்குவரத்து பிரிவு போலீசார் பல்வேறு பகுதிகளில் நின்று ஹெல்மெட் அணிந்து செல்லாதவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து அபராதம் கட்ட வைத்தனர்.