செய்திகள்
ராமநாதபுரத்தில் ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பட்டதாரி வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் சண்முகச்சாமி. இவரது மகன் ராமர் (வயது 25). பி.காம்., பட்டதாரியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராமர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி இன்று காலை ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாள பகுதிக்கு வந்த அவர், அந்த வழியாக வந்த ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் உடல் சிதறி ராமர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.