செய்திகள்

சென்னை பிராட்வேயில் பீகாரை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Published On 2016-06-14 19:38 GMT   |   Update On 2016-06-14 19:38 GMT
சென்னை பிராட்வேயில் பீகாரை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
சென்னை:

தொழிலாளர் கமிஷனர் பெ.அமுதா உத்தரவின் பேரில் தொழிலாளர் இணை-துணை கமிஷனர்கள் அறிவுறுத்தலின்பேரில் சென்னை முதல் வட்ட தொழிலாளர் ஆய்வாளர் தலைமையில் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் செயல்பட்டு வந்த ஒரு பைகள் (பேக்) தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 5 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

இவர்கள் 5 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் அந்த கம்பெனியை நடத்தியவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுவர்கள் வயது குறித்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சென்னையில் உள்ள அன்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டால் வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை அபராதமும், ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

Similar News