செய்திகள்

கொடைக்கானல் மலை கிராம மக்களை மிரட்டும் யானை கூட்டம்

Published On 2016-06-29 09:55 GMT   |   Update On 2016-06-29 09:55 GMT
கொடைக்கானல் மலைக் கிராமங்களில் மீண்டும் யானை கூட்டம் புகுந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே மூங்கில்காடு மற்றும் பெருங்காடு ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் குட்டியுடன் கூடிய 8 யானைகள் கொண்ட கூட்டம் மக்களை அச்சுறுத்தி வருகின்றது.

மேலும் இப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழை, பீன்ஸ் போன்றவற்றை சேதப்படுத்தி வருகிறது. தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் முருகன், பூம்பாறை, வனச்சரகர் மணிமாறன், பழனி வனச்சரகர் கணேஷ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானைக் கூட்டத்தை பழனி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த குழுவினர் கிராம மக்களின் உதவியுடன் வெடிகளை வெடித்து 4 யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் 4 யானைகளை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் தான் கொடைக்கானல் கீழ்மலைக் கிராமமான பேத்துப்பாறை பகுதியில் தோட்ட தொழிலாளி பிச்சையம்மாள் என்பவரை யானை மிதித்து கொன்றது.

இந்த நிலையில் யானைக் கூட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் முகாமிட்டு அச்சுறுத்தி வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News