செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் மூடப்பட்டுள்ள மதுக்கடை முன்பு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Published On 2016-07-07 07:29 GMT   |   Update On 2016-07-07 07:29 GMT
பட்டினப்பாக்கம் மதுக்கடை முன்பு பெண்கள் அமைப்பினர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த ஆக்னஸ் என்பவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
சென்னை:

சென்னை பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி சம்பவத்தின் போது ஆசிரியை நந்தினி மற்றும் சாகர் என்ற முதியவர் ஆகியோர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருணாகரன் என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு அங்குள்ள மதுக்கடையே காரணம் என்று கூறி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக பிரச்சனைக்குரிய மதுக்கடை மூடப்பட்டுள்ளது.

அந்த கடை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார் வசதி இல்லாத பட்டினப்பாக்கம் மதுக்கடைக்கு மதுவாங்க வருபவர்கள் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் வைத்தே மது அருந்துவதாகவும் இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் பட்டினப்பாக்கம் மதுக்கடை முன்பு பெண்கள் அமைப்பினர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த ஆக்னஸ் என்பவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

தனது வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன் கார்டு ஆகியவற்றையும் தீ வைத்து எரிக்க போவதாகவும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கி எரிந்தனர். தீக்குளிக்க முயன்ற ஆக்னசின் உடலில் தண்ணீரை ஊற்றினர். மேலும் சில பெண்களும் தீ குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்களை கைது செய்தனர். இதனால் பட்டினப்பாக்கத்தில் பரபரப்பு நிலவியது.

கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News