செய்திகள்

தளி அருகே பஸ் கண்டக்டரை தாக்கிய 5 பேர் கொண்ட கும்பல் கைது

Published On 2016-07-07 09:27 GMT   |   Update On 2016-07-07 09:27 GMT
தளி அருகே பஸ் கண்டக்டரை தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாரண்ட அள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னபையன். (வயது 32). இவர் ஓசூர் அரசு போக்குவரத்து பணி மனையில் நகர பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று ஓசூரில் இருந்து தளி வழியாக ஜவளகிரி பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சில் பணியாற்றினார். இந்த பஸ் நேற்று மாலையில் தளி அருகே உள்ள ஜவளகிரி பஸ் நிலையத்தில் வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் பஸ்சை பலமாக அடித்தது.

இதனை கண்டக்டர் சின்னபையன் தட்டிக் கேட்டார். இதனால் இரு தரப்புக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.

பின்னர் பஸ் தளியை நோக்கி புறப்பட்டது. அப்போது அந்த கும்பல் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து மாருப்பள்ளி கிராமத்தில் பஸ்சை வழிமறித்து நிறுத்தி சின்னபையனை கடுமையாக தக்கியது. பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இது குறித்து தளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி, 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தார். அவர்களின் பெயர் விபரம் வருமாறு:-

1. சீனிவாசன்(வயது 35).

2. ரமேஷ்(37).

3. ஜெயராமன்(40).

4. சீனிவாசன் (25).

5. சீனிவாசன் (25).

இவர்கள் அனைவரும் தளி அருகே உள்ள ஓட்டர்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Similar News