செய்திகள்
தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற பள்ளி மாணவி மாயம்
தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் சகாய பிரதீபா (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற சகாய பிரதீபா வெகு நேரமாகியும் வீடு திருபம்ப வில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தோணிசாமி மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார் எங்கும் கிடைக்க வில்லை. இதையடுத்து அவர் ஆலயத்திற்கு சென்ற தனது மகள் மாயமாகி விட்டார் என தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகாய பிரதீபா எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரேனும் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்களா? என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.