செய்திகள்

தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 30 ஆயிரம் வழக்குகள் விசாரணை

Published On 2016-10-08 08:59 GMT   |   Update On 2016-10-08 08:59 GMT
தேசிய லோக் அதாலத் மக்கள் மன்றத்தில் 30 ஆயிரத்து 552 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் எத்தனை வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் சமரசத்துக்கு வருகிறது என்று இன்று மாலை தெரியவரும்.
சென்னை:

நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் மன்றம் நடத்தப்படுகின்றன.

அக்டோபர் மாதத்துக்கான லோக் அதாலத் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.விமலா, கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையிலும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் தலைமையிலும் 4 அமர்வுகளும், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ் திரேட்டுகள் என்று 246 அமர்வுகள் என்று மொத்தம் 250 அமர்வுகள் இன்று வழக்குகளை விசாரித்து வருகின்றன.

இந்த அமர்வுகளில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்பநல வழக்குகள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான வழக்குகள் என்று 30 ஆயிரத்து 552 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் எத்தனை வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் சமரசத்துக்கு வருகிறது? என்று இன்று மாலையில் தான் தெரியவரும்.

Similar News