செய்திகள்

பேராவூரணியில் பழைய ரூ.500, 1000 மூலம் பேரூராட்சி வரிகளை செலுத்தலாம்

Published On 2016-11-21 09:51 IST   |   Update On 2016-11-21 09:51:00 IST
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் மற்றும் நீலகண்ட பிள்ளையார் கோவில் அலுவலகம் ஆகியவற்றில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக வரி மற்றும் குத்தகை பாக்கி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி:

பேராவூரணி பேரூராட்சி பகுதியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி, பேரூராட்சி அலுவலகத்தில் வருகிற 24ந்தேதி வரை தொழில்வரி, சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் கட்டணம் ஆகிய வரி இனங்களை செலுத்தலாம் என பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் குத்தகை மற்றும் வாடகைக்கு குடியிருந்து வருபவர்கள் குத்தகை மற்றும் வாடகை பாக்கியை வருகிற 24ந்தேதி வரை பழைய 500, 1000 ரூபாய்களை கொண்டு செலுத்தலாம் என கோயில் நிர்வாக அதிகாரி டி.கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.

Similar News