செய்திகள்

கடலூரில் பாட்டி திட்டியதால் 5-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து சாவு

Published On 2017-01-27 10:40 GMT   |   Update On 2017-01-27 10:40 GMT
பாட்டி திட்டியதால் 5-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:

கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் முத்துக்குமரன்(வயது 10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தனது பாட்டி பார்வதி வீட்டில் தங்கியிருந்து தினமும் பள்ளிக்கு சென்று வந்தான்.

கடந்த 24-ந் தேதி முத்துக்குமரன் வீட்டில் இருந்தான். அப்போது அவன் சட்டைப்பையில் ரூ.200 இருந்தது. அந்த பணம் எப்படி? வந்தது என்று முத்துக்குமரனிடம் பார்வதி கேட்டார்.

அதற்கு அவன் மாமா சட்டைப்பையில் இருந்து அந்த பணத்தை எடுத்தேன் என்று கூறினான். இதனால் பார்வதி கோபமடைந்து அவனை திட்டினார்.

இதுகுறித்து மாமாவிடம் சொல்வேன் என்று கூறினார். இதை கேட்டு மனமுடைந்த முத்துக்குமரன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டான். இதில் அவன் உடல் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனிக்காமல் முத்துக்குமரன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News