செய்திகள்

ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்தார் முதல்வர்

Published On 2017-04-17 14:52 GMT   |   Update On 2017-04-17 14:52 GMT
ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணித்து கப்பலை பார்வையிட்டார்.
சென்னை:

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த போர்க்கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

இந்நிலையில், ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணிக்கும் விழா துறைமுகத்தில் இன்று நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு, போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்து அதற்கான கல்வெட்டைத் திறந்து வைத்து, கப்பலை பார்வையிட்டார்.

விழாவில் கிழக்கு நேவல் கமாண்ட் பிளாக் ஆபீசர் கமாண்டிங்–இன்–சீப் வைஸ் அட்மிரல் எச்.சி.எஸ். பிஷ்த்திடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாகரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News