செய்திகள்

மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

Published On 2017-07-26 10:01 GMT   |   Update On 2017-07-26 10:01 GMT
நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் ஆதாரமாகவும் விளங்கி வருவது பவானிசாகர் அணையாகும்.

பருவ மழைகள் பொய்த்ததால் பவானிசாகர் அணையில் இருந்து விவசாயத்துக்காக திறந்துவிடும் உயிர் நீர் கடந்த வருடம் திறக்கப்படவில்லை. அதே போன்று இந்த வருடமும் இது வரை உயிர் நீர் திறக்கவில்லை.

கடந்த வாரம் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் தொடர்ந்து 3 நாட்கள் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு 8 ஆயிரம் கனஅடி வரை நீர் வந்தது.

இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 6 அடியாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை.

நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 4 நாட்களுக்கு முன்பு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு 704 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 50.70 அடியாக உள்ளது.

அணையில் இருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றுக்கு 190 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.
Tags:    

Similar News