செய்திகள்

வத்தலக்குண்டு அருகே கோஷ்டி மோதலில் ஜீப் எரிப்பு: 19 பேர் கைது

Published On 2017-09-28 09:01 GMT   |   Update On 2017-09-28 09:01 GMT
வத்தலக்குண்டு அருகே கோஷ்டி மோதலில் ஜீப் எரிக்கப்பட்டது. இதில் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் 6-வது வார்டை சேர்ந்தவர் ராம்பிரபு(வயது45). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(50). ஊர்நாட்டாண்மை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் வரிவசூல் செய்வதில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து ஊர்பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுந்தர் தலைமையில் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. நவராத்திரியையொட்டி விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதில் ராம்பிரபு மனைவி தேவி பங்கேற்றார். அப்போது சுந்தருக்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது

இதுகுறித்து தேவி தேனி மாவட்டத்தில் இருந்து வந்த உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் அனைவரும் சுந்தர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் ஆதரவாளர்கள் ராம்பிரபு வீட்டிற்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளில் தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தேவி கொடுத்த புகாரின் பேரில் முத்துராஜ், சிவணாண்டி உள்பட 11 பேரும், ராஜசுப்புலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ஈஸ்வரன், நாகம்மாள் உள்பட 8 பேர் என 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவான சுந்தர், ரமேஷ், நல்லமணி ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News