செய்திகள்

நெல்லை: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

Published On 2017-11-01 21:30 IST   |   Update On 2017-11-01 21:30:00 IST
நெல்லை மாவட்டத்தில் நாள் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நாள் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் விடிய, விடிய லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது. நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் வட மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்து உள்ளது. இந்நிலையில் மழை காரணமாக நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

Similar News