செய்திகள்
மெலட்டூர் அருகே விவசாயி வீட்டில் திருட்டு
மெலட்டூர் அருகே விவசாயி வீட்டில் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெலட்டூர்:
மெலட்டூர் அருகே உள்ள அன்னப்பன் பேட்டையை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 55). விவசாயி. இவர் நேற்று வீட்டை திறந்து வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்து ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டான்.
இது பற்றி மீனாட்சி சுந்தரம் மெலட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.