செய்திகள்

சத்தியமங்கலம் அருகே 3 நாட்களாக ஊருக்குள் புகுந்து மக்களை பயமுறுத்தும் ஒற்றை யானை

Published On 2018-05-22 15:39 IST   |   Update On 2018-05-22 15:39:00 IST
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றையானை கடந்த 3 நாட்களாக மக்களை பயமுறுத்தி வருகிறது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் வனப் பகுதியையொட்டி பண்ணாரி, குய்யனூர், புதுவட வள்ள, கெஞ்சனூர் சிக்கரசம் பாளையம் என பல கிராமங்கள் உள்ளன.

இந்த ஊருக்குள் எப்போதாவது காட்டுபன்றி, யானை, மான் போன்ற வன விலங்குகள் புகும். கடந்த 3 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் ஒற்றை யானை ஒன்று குய்யனூர் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.

இன்று அதிகாலையும் அந்த ஒற்றையானை குய்யனூர் பிரிவில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு இருந்த விவசாய பயிர்களை சாப்பிட்டு விட்டு ஊருக்குள் சுற்றி திரிந்தது. அதன்பிறகு அந்த யானை எந்த பகுதிக்குள் நுழைந்தது? என்று தெரியவில்லை.

கடந்த 3 நாட்களாக அந்த ஒற்றையானை எந்த ஊருக்குள் புகுந்து விடுமோ... என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இரவில் ஊர் இளைஞர்கள் முழித்துக் கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே வனத்துறையினர் ஊருக்குள் புகும் ஒற்றை யானையை மீண்டும் நுழைய விடாமல் தடுத்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டுவிட வேண்டும்என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News