செய்திகள்

காவலர் மீது தாக்கியதால் என்கவுன்டர் நடத்தினோம் - கூடுதல் ஆணையர் சாரங்கன்

Published On 2018-07-03 17:29 GMT   |   Update On 2018-07-03 17:35 GMT
ரவுடிகளை பிடிக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் தான் ரவுடி ஆனந்தனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றோம் என கூடுதல் ஆணையர் சாரங்கன் தெரிவித்துள்ளார். #Chennai #Encounter
சென்னை:

சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடி ஆனந்தன் என்பவரை போலீசார் இன்று இரவு என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இவர் மீது 12-க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரவுடிகளை பிடிக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் தான் ரவுடி ஆனந்தனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றோம் என கூடுதல் ஆணையர் சாரங்கன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், காவலர் ராஜவேலுவை வெட்டிய குற்றவாளிகள் சோழிங்நல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்றபோது தனிப்படை போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தாக்கினர். இதில் ரவுடி தாக்கியதில் காவலர் இளையராஜா காயம் அடைந்தார். காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் ரவுடி ஆனந்தனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றோம். #Chennai #Encounter
Tags:    

Similar News