கடலாடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்
சாயல்குடி:
கடலாடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கடலாடி ஒன்றிய செயலாளர் பத்மநாதன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் மகேந்திர பாண்டி யன் வரவேற்றார் ஒன்றிய துணை செயலாளர் முனியசாமி, இணை செயலாளர் குணசேகர பாண்டியன், பொருளாளர் வெள்ளத் துரை, பேரவை ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர் சண்முக நாதன், முன்னாள் அவைத் தலைவர் பாண்டி, ஊராட்சி செயலாளர் நல்லமருது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவுதினத் தன்று ராமேசுவரத்திற்கு வருகை தரும் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு கடலாடி ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இப்பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு செயலாளர் உமர் கத்தா பொதுகுழு உறுப்பினர் மலைக்கண்ணன் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தூரான், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகானந்தம் அண்ணா தொழிற் சங்கம் ராமமூர்த்தி, மாவட்ட பேரவை இணை செயலாளர் முத்துராமலிங்கம், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஜோதிமுருகன், மாணவரணி செயலாளர் கார்த்திக்ராஜா, விவசாய அணி செயலாளர் சிவசுப் பிரமணியன், கிடாக்குளம் கிளை செயலாளர் மகா தேவன், கடலாடி ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளர் பூமிநாதன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.