செய்திகள்

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி- 3 சாலைகளில் அலைகடலாக திரண்ட பொது மக்கள்

Published On 2018-08-08 07:06 GMT   |   Update On 2018-08-08 07:06 GMT
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ராஜாஜி ஹாலுக்கு அலைகடலாக திருண்டு வந்த வண்ணம் உள்ளனர். #RIPKarunanidhi
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தலைவர்களும், தொண்டர்களும் அலை அலையாக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அண்ணாசாலை வழியாக ராஜாஜி அரங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சிவானந்த சாலை வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.

மக்கள் வருகை அதிகரித்ததால் இந்த 3 சாலைகளிலும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் புளிசாதம், இட்லி, தயிர் சாதம் போன்றவை விற்பனை செய்யப்பட்டன. பொது மக்கள் அவற்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கேயே சுற்றியப்படி காணப்பட்டனர்.



கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவு வெளியிட்டதும் அண்ணாசாலை, வாலாஜா சாலை, சிவானந்த சாலை ஆகியவற்றில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதனால் மதியம் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக திணற நேரிட்டது.
Tags:    

Similar News