செய்திகள்

பெட்ரோல் டீசல் தொடர் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2018-09-14 01:23 GMT   |   Update On 2018-09-14 01:23 GMT
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். #FuelPriceHike
சென்னை:

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்தவகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை வழக்கம்போல அதிகரித்து நாட்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 19 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் முந்தைய நாள் விலையை காட்டிலும் நேற்று 30 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 49 காசுகள் என பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.



இதேபோல், டீசலின் விலையும் அதிகரித்தது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 77 ரூபாய் 25 காசுகள் என விற்பனை ஆனது. இன்று டீசலின் விலை 24 காசுகள் உயர்ந்து, 77 ரூபாய் 49 காசுகள் என டீசல் விற்பனை ஆனது.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு எங்களை வாட்டி வதைக்கிறது. பெட்ரோல் டீசல் விலை குறையாமல் போனால் பஸ் பயணத்துக்கு மாற வேண்டியது தான் என தெரிவித்தனர். #FuelPriceHike
Tags:    

Similar News