செய்திகள்
சேலம் அருகே ஓடும் கல்லூரி பஸ்சில் மாணவியை சில்மிஷம் செய்த டிரைவர் கைது
சேலம் அருகே ஓடும் கல்லூரி பஸ்சில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நங்கவள்ளி:
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இம்மாணவி கல்லூரிக்கு தினமும் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் செல்வது வழக்கம். இந்த பஸ்சின் டிரைவராக எடப்பாடி தாலுகா அடையூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 31) என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து புறப்பட்டு கல்லூரிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பின்னர் மாலையில் அதே பஸ்சில் திரும்பி வந்தபோது அந்த மாணவியை டிரைவர் வெங்கடாசலம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று டிரைவர் வெங்கடாசலம் மீது புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, சம்பந்தப்பட்ட டிரைவர் வெங்கடாசலத்தை அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர், கல்லூரி விடுமுறை நாட்களில் வெளியூருக்கு சென்று பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வந்ததும், சம்பவத்தன்று மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
ஓடும் கல்லூரி பஸ்சில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.