செய்திகள்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மணல் மாட்டுவண்டி குவாரி திறக்ககோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-08-27 08:17 GMT   |   Update On 2019-08-27 08:17 GMT
மணல் மாட்டுவண்டி குவாரி திறக்ககோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெ.1 டோல்கேட்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சார்பில் இன்று நெ.1 டோல்கேட் ரவுண்டானா அருகில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாநகர் மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், புறநகர் மாவட்ட செயலளார்சிவராஜ், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், வி.தொ.ச. புறநகர் மாவட்ட தலைவர் சுப்பு, சி.பி.எம். மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனக ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் வி.நி.ரவிச்சந்திரன், மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அமைதி பேச்சு வார்த்தையில் தீர்மானித்தப்படி கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் மணல் மாட்டு வண்டி குவாரி திறக்க வேண்டும். திடீர், திடீரென மணல் மாட்டு வண்டி குவாரிகளை மூடுவதை கைவிட்டு தொழிலாளர்களையும், மாடுகளையும் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் குணா, பாலாஜி, ரமேஷ், ஜான், ரவி ஜெயகாந்த், ராஜேந்திரன், திருவேங்கடம் உள்பட 100க்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News