செய்திகள்
புகார்

விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கு: அ.ம.மு.க. நிர்வாகி உள்பட 4 பேரை கைது செய்யக்கோரி புகார்

Published On 2020-04-21 18:56 IST   |   Update On 2020-04-21 18:56:00 IST
பாப்பாநாடு அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அ.ம.மு.க. நிர்வாகி உள்பட 4 பேரை கைது செய்யக்கோரி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பாப்பாநாடு போலீஸ் நிலைய கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு கோட்டை கிராமத்தில் கடந்த 10-ம் தேதி திருமேனி என்ற விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டுள்ளதாக திருமேனி மகன் அய்யப்பன் பாப்பாநாடு போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கொலையாளிகளை ஒரத்தநாடு டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.

இந்த வழக்கில் 5 பேர் போலீசில் சரண் அடைந்தனர். மீதமுள்ள 4 பேர் கைது செய்யப்படாத நிலையில் கொலை செய்யப்பட்ட விவசாயி திருமேனி மகன் அய்யப்பன், காவல் துறை இயக்குனர் மற்றும் திருச்சி காவல் ஐ.ஜி, தஞ்சாவூர் டி.ஐ.ஜி மற்றும் தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை கொலையில் தொடர்புடைய 9 பேரில் 5 பேர் சரணடைந்துள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள அ.ம.மு.க. நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Similar News