செய்திகள்
கால்நடை

கால்நடை விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை விண்ணப்பங்கள் வினியோகம்

Published On 2020-05-13 11:22 GMT   |   Update On 2020-05-13 11:22 GMT
புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடை விவசாயிகளுக்கும் உழவர் கடன் அட்டை வழங்க நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடை விவசாயிகளுக்கும் தங்கள் கால்நடை விவசாய தொழிலை மேம்படுத்த வங்கிகள் மூலம் உழவர் கடன் அட்டை வழங்க நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டம் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து கால்நடை விவசாயிகளுக்கும் நீட்டிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

எனவே, கால்நடை விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கறவை பசுக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ரூ.2 லட்சம் வரையில் கறவை பசு வளர்ப்பினை மேம்படுத்த ஆகும் செலவினத்தை 7 சதவீத வட்டியில் கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடனை முறையான தவணையில் திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

இத்திட்டத்தினை அனைத்து கால்நடை விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள அனைத்து கொம்யூன் உதவி கால்நடை மருத்துவர்கள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப படிவங்களை 10 நாட்களுக்குள் பூர்த்தி செய்து தரும்படி கால்நடைத்துறை இயக்குனர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News