செய்திகள்
புதுப்பேட்டை அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது
புதுப்பேட்டை அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் அழகுபெருமாள்குப்பம் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் கவிராஜன்(வயது 23) என்பதும், விற்பனைக்காக சாராயம் கடத்தி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் கவிராஜனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.