செய்திகள்
கோப்புபடம்

டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள்- டிரைவர்கள் வேலை நிறுத்தம்

Published On 2020-07-23 12:31 IST   |   Update On 2020-07-23 12:31:00 IST
டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் லாரி உரிமையாளர்கள்-டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:

பேரிடர் கால சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். காலாவதியான சுங்க சாவடிகளை அகற்றிட வேண்டும். டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். வாகன கடனுக்கான தவணை தொகைக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும். டிரைவர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் பேரிடர் இழப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்-டிரைவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று திருவாரூரில் லாரி உரிமையாளர்கள்-டிரைவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பெரியசாமி, தலைவர் சின்னராஜ், பொருளாளர் சிங்காரவேல் ஆகியோர் தலைமையில் உரிமையாளர்கள், டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். வேலை நிறுத்த போராட்டத்தினால் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட லாரிகள் ஓடாததால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன.

Similar News