செய்திகள்
திமுக எம்எல்ஏ கீதா ஜீவன்

தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-23 18:09 IST   |   Update On 2020-07-23 18:09:00 IST
தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

மேலும்  கீதா ஜீவனின் மகள் மற்றும் மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்களும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

Similar News