செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவுத்துறை ஊழியர்கள்

கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த கூட்டுறவுத்துறை ஊழியர்கள்

Published On 2020-08-19 10:52 GMT   |   Update On 2020-08-19 10:52 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் இயக்கம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல், நிலவளவங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் உள்ளிட்ட அனைத்து வகை கூட்டுறவு அலுவலகங்களிலும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறையில் சீரமைப்பு என்ற பெயரில் 2009-ம் ஆண்டு முதல் 636 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. 32 துணைப்பதிவாளர் மற்றும் 54 கூட்டுறவு சார் பதிவாளர் நிலையிலான மேலாண்மை இயக்குனர் பணியிடங்களை குறைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
Tags:    

Similar News