செய்திகள்
இரண்டாம் குத்து பட போஸ்டர்

டி.வி. நெடுந்தொடர்களில் தவறான உறவுகள் குறித்தே பல கதைகள் அமைகின்றன: கோர்ட் வேதனை

Published On 2020-11-03 16:51 IST   |   Update On 2020-11-03 18:04:00 IST
இரண்டாம் குத்து படம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை டி.வி. நெடுந்தொடர்களுக்கு தணிக்கை குழு ஏதும் கிடையாதா? என கேள்வி எழுப்பியுள்ளது.
இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை நீக்கக்கோரி பெருமாள் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று கிருபாகரன், புகழேந்தி ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இரண்டாம் குத்து படத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ‘‘அந்தக்கால படங்கள் குடும்ப உறவுகளையும், நாட்டு பற்றையும் வளர்க்கும் விதமாக இருந்தது. தற்போது ஆபாசத்தைதயும், வன்முறையையும் பரப்புவதாக இருக்கிறது. விளம்பரத்திற்காக இரட்டை அர்த்தம், தகாத வார்த்தை வசனங்களை வைக்கின்றனர்.’’ என்றனர்.

மேலும், இது தொடர்பாக பேஸ்புக், யூடியூப் கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.

அத்துடன் ‘‘டி.வி. நெடுந்தொடர்களுக்கு தணிக்கை குழு ஏதும் கிடையாதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ‘‘பெரும்பாலான டி.வி. நெடுந்தொடர்கள் குற்றச் செயலுக்கு காரணமாக அமைகின்றன. தவறான உறவுகள் குறித்தே பல கதைகள் அமைகின்றன’’ என்ற கருத்தையும் வெளிப்படுத்தினர்.

Similar News