செய்திகள்
கோத்தகிரி அரசு மருத்துவமனை

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய குவியும் பொதுமக்கள்

Published On 2021-05-20 11:04 GMT   |   Update On 2021-05-20 11:04 GMT
அறிகுறி உள்ளதாக கூறி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஏராளமானவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய குவித்து வருகின்றனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் யாருக்காவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அறிகுறி உள்ளதாக கூறி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஏராளமானவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய குவித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரிசோனை செய்தவர்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News