செய்திகள்
முக ஸ்டாலின்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளைமறுதினம் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

Published On 2021-05-20 17:22 GMT   |   Update On 2021-05-20 17:22 GMT
தமிழக அரசால் இரண்டு வாரம் அமல்படுத்தப்பட்ட மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு வருகிற திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது.
தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு 13 கட்சிகளை கொண்ட எம்எல்ஏ-க்கள் குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில் விஜயபாஸ்கர், நயினார் நாகேந்தின், ஜிகே மணி, முனிரத்தினம், சதன் திருமலைக்குமார், பாலாஜி, ஜெகன் மூர்த்தி, ராமச்சந்திரன், நாகை மாலி, ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

கொரோனா தடுப்புப் பணிகள், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது உள்ளிட்டவை தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட வாய்ப்புள்ளது. சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, அவர்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படலாம்.
Tags:    

Similar News