செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் 10,186 பேர் பலி: மொத்த உயிரிழப்பில் 42 சதவீதம்

Published On 2021-06-01 03:42 GMT   |   Update On 2021-06-01 03:42 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 24,232 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை மே மாத தொடக்கம் முதலே இரண்டாம் அலையின் தாக்கம் ருத்ர தாண்டவம் ஆடியது.

கடந்தாண்டு முதல் இல்லாத அளவிற்கு ஒருமாத உயிரிழப்பு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த மாதம் வரை 14,046 பேர் பலியான நிலையில், மே மாதத்தில் 10,186 பேர் பலியானதையடுத்து மொத்த பலியின் எண்ணிக்கை 24,232 அதிகரித்துள்ளது. மே மாதம் மட்டும் 10,186 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் கடந்த மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.



1-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை தினசரி உயிரிழப்பு 200-க்கு கீழ் இருந்ததது. 8-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை 200-ல் இருந்து 300-க்குள் இருந்தது.

15-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 300-ல் இருந்து 400-க்குள் இருந்தது. 21-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை 400-க்குள் மேல் பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 11,66,756 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மே மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 20,96,516 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News