செய்திகள்
கொரோனா வைரஸ்

டெல்டாவில் கொரோனாவுக்கு 17 பேர் பலி

Published On 2021-06-01 04:15 GMT   |   Update On 2021-06-01 04:15 GMT
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 565 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,087 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 ஆயிரத்து 771 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52, 62 வயதுடைய 2 பெண்கள் பலியானார்கள். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 512 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 717 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 477 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 23 ஆயிரத்து 296 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55, 59, 65, 70 வயதுடைய 4 பெண்களும், 45, 50, 57, 59, 62, 80 வயதுடைய 6 ஆண்களும் என 10 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 336 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 565 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 572 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 23 ஆயிரத்து 908 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33, 59 வயதுடைய 2 ஆண்களும், 51, 54, 70 வயதுடைய 3 பெண்களும் என 5 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News