செய்திகள்
கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

வெள்ளகோவிலில் 100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமனம்

Published On 2021-06-01 07:24 GMT   |   Update On 2021-06-01 07:24 GMT
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் 100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம பகுதிகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதிப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள 100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர்களை அமைக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலந்தாய்வு  கூட்டம் நடந்தது. இதற்கு உதவி திட்ட அலுவலர் ஹசீனா பேகம், வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். 

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வெள்ளகோவில் பகுதியில் தொற்று பாதிப்பை குறைக்க அனைவரும் ஒன்று சேர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், மீனாட்சி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்கள், வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News