செய்திகள்
கோப்புப்படம்

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்-வேளாண் அதிகாரி ஆய்வு

Published On 2021-07-02 07:12 GMT   |   Update On 2021-07-02 07:13 GMT
பயிர்களில் மகசூல் பெருக்குவதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.
உடுமலை:

வேளாண் துறை சார்பில் உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்ட செயல்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகரன், உடுமலை வட்டாரம் குருவப்ப நாயக்கனூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பயிர்களில் மகசூல் பெருக்குவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். 

மேலும் அங்கு செயல்படுத்தப்பட்ட சொட்டு நீர் பாசனம், துணை நீர்ப்பாசன அமைப்புகளான 1.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி, மோட்டார் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்து குறைந்த நீரில் அதிக மகசூல் பெறவும் நேரடியாக வேர்களுக்கு நீர் சென்று சேருவதால் நல்ல மகசூல், பாசன பரப்பு அதிகரிக்க முடியும்.எனவே சிறந்த முறையில் நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் வேளாண் உதவி இயக்குனர் தேவி, வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News