செய்திகள்
போர்வெல் வாகனம்.

திருப்பூரில் போர்வெல் கட்டணம் உயர்வு

Published On 2021-08-20 10:14 GMT   |   Update On 2021-08-20 10:35 GMT
ஒவ்வொரு 100 அடிக்கும் விலை கூடுதலாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர், ஈரோடு, கோவை, மாவட்டத்தை சேர்ந்த ரிக் உரிமையாளர்கள் கடந்த 13-ந் தேதி முதல் ட்ரிலிங் ரேட் உயர்வுக்காக போர்வெல் ரிக் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதற்கு டீசல் விலை, உதிரிபாகங்கள் விலை, ஆட்கள் கூலி உயர்வு போன்ற காரணங்கள் உள்ளது. போர்வெல் தொழில் மிகவும் நலிவடைந்த நிலைக்கு சென்றுவிட்டதுதால் இந்த போராட்டம் கோபி, பெருமாநல்லூர், பெருந்துறை, குடிமங்கலம், பொள்ளாச்சி, தாராபுரம் ஆகிய இடங்களில் நடந்தது. 

அப்போது சுதந்திரதினத்தினத்தையொட்டி ரிக் வாகனங்கள் நிறுத்தியிருந்த திடலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்த நிலையில் பெருமாநல்லூரில் ரிக் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

ட்ரில்லிங் ரேட்டை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போர்வெல் ட்ரில்லிங் ரேட்டை 6:14 போர்வெல் 1 அடி முதல் 500 அடி வரை ஒரு அடிக்கு ரூ.95- ம், 4% போர்வெல் 1 அடி முதல் 200 அடிவரை ஒரு அடிக்கு ரூ.95 -ம், 4% போர்வெல் கிணற்றுக்குள் ஒரு அடி முதல் 200 அடிவரை ஒரு அடிக்கு ரூ.120- ம், அதை அடுத்த ஒவ்வொரு 100 அடிக்கும் விலை கூடுதலாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News