செய்திகள்
குண்டாறு அணை நிரம்பி வழியும் காட்சி.

100 நாட்களாக நிரம்பி வழியும் குண்டாறு அணை

Published On 2021-09-02 06:59 GMT   |   Update On 2021-09-02 07:01 GMT
தென்காசி பகுதிகளில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் குண்டாறு அணை கடந்த மே 26-ந்தேதி தனது முழு கொள்ளவை எட்டியது.
செங்கோட்டை:

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கண்ணுப்புளி மெட்டு பகுதியில் அமைந்துள்ள குண்டாறு அணை மிக சிறிய அணையாகும். மொத்தம் 36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது ஒரு வாரம் பலத்த மழை பெய்தாலே நிரம்பி விடும்.

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் பெரும்பாலான இடங்களில் பருவமழை பொய்த்த நிலையில் தென்காசி பகுதிகளில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் குண்டாறு அணை கடந்த மே 26-ந்தேதி தனது முழு கொள்ளவை எட்டியது.

தொடர்ந்து நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று 100-வது நாளாக அணை நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News