செய்திகள்
கோப்புபடம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்

Published On 2021-09-02 09:45 GMT   |   Update On 2021-09-02 09:45 GMT
குறிப்பாக ஓ.எம்.சி.எல்., நிறுவனம் ஆண்டுதோறும் 500 நர்சிங் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த ஆங்கிலத்தேர்வு பயிற்சி நடத்துகிறது.
திருப்பூர்:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் 40 ஆண்டாக பல்வேறு வெளிநாடுகளில் 10,350 க்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்தியுள்ளது. குறிப்பாக ஓ.எம்.சி.எல்., நிறுவனம் ஆண்டுதோறும் 500 நர்சிங் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த ஆங்கிலத்தேர்வு பயிற்சி நடத்துகிறது.

இதில் தேர்வாகும் செவிலியர் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் 24 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இதுபோல் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளவும், பதிவு செய்யவும், www.omcmanpower.com என்ற இணையதள முகவரியில் அணுகலாம். 

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421 - 2999152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News